மட்டக்களப்பில் நடைபெற்ற ஆணழகன் தேகக் கட்டமைப்பு விரத்திப் போட்டி

#SriLanka #Jaffna #Body #competition
Prasu
2 years ago
மட்டக்களப்பில் நடைபெற்ற ஆணழகன் தேகக் கட்டமைப்பு விரத்திப் போட்டி

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஆணழகன் தேகக் கட்டமைப்பு விரத்திப் போட்டி இப்போட்டி திங்கட்கிழமை மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண மாவட்ட விளையாட்டு அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இது போட்டியில் மட்டக்களப்பு , அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள சுமார் 50 மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் மிஸ்டர் ஈஸ்டன் பட்டத்தை திருகோணமலையை சேர்ந்த எஸ். சரசு ராஜன் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

images/content-image/1717487319.jpg 

இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த மை. டியன் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த எம். எல். எம் . சப்ராஸ் அவர்களும் கடின போட்டிகளில் மத்தியில் வெற்றி வாகை சூடி வெற்றிக் கிண்ணங்கள் பெற்றுக் கொண்டனர். 

நடக்க இருக்கும் 49வது தேசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியை பெற்றுக் கொண்டனர்.

images/content-image/1717487328.jpg

இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தில் பணிப்பாளர் யு.சிவராஜா மாகான விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் ,மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர், மட்டக்களப்பு ஆணழகன் கட்டமைப்பு சங்கத்தின் செயலாளர் கே.ரொனி பிரின்சன் ,முன்னாள் கிழக்கு மாகாண சபையில் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

images/content-image/1717487339.jpg

images/content-image/1717487354.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4