தடுப்பூசிகளை திரும்பப் பெறுகிறது அஸ்ராசெனக்கா!

#Covid Vaccine #Britain #Vaccine
Mayoorikka
1 year ago
தடுப்பூசிகளை திரும்பப் பெறுகிறது அஸ்ராசெனக்கா!

பிரிட்டிஷ் மருந்து நிறுவனம் அஸ்ராசெனக்கா தடுப்பூசி ஏற்றுதலானது அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின் அஸ்ட்ராசெனெக்கா அதன் COVID-19 தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது. 

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, கோவிஷீல்டாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் தயாரிக்கப்பட்டது. COVID-19 க்கான புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளின் மிகுதியினால் வணிக காரணங்களுக்காக உலகளாவிய திரும்பப் பெறுதல் தொடங்கப்பட்டதாக தடுப்பூசி தயாரிப்பாளர் கூறியதாக The Telegraph தெரிவித்துள்ளது. 

 புதிய மாறுபாடுகளைச் சமாளிக்கும் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளால் அஸ்ராசெனக்கா முறியடிக்கப்பட்டது, அஸ்ட்ராசெனக்கா தெரிவிக்கிறது. குறித்த தடுப்பூசி இனிமேல் தயாரிக்கப்படப் போவதில்லை மற்றும் இனிமேல் அதனைப் பயன்படுத்த முடியாது என்பவற்றைக் காரணங்காட்டி நிறுவனம் தானாக முன்வந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அதன் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

 தடுப்பூசியைப் பயன்படுத்தி வரும் பிற நாடுகளிலும் இதே போன்று தடுப்பூசிகள் திரும்பப் பெறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!