யாழ்ப்பாணத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
#SriLanka
#Jaffna
#School
#leave
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

யாழ்ப்பாணத்தின் சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்று புதன்கிழமை (20) மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



