இஸ்ரேலிய பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் : இஸ்ரேலிய மக்கள் வலியுறுத்தல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

காசா தொடர்பான சூழ்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாதிக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் விரும்புவதாக கருத்து கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சி அத்தகைய ஆய்வுத் தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, பதிலளித்தவர்களில் 58 சதவீதம் பேர் இஸ்ரேலிய அரசாங்கத்தின் தலைவர் உடனடியாக ராஜினாமா செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
54 சதவீதமானோர் நாட்டில் திடீர் தேர்தல் ஒன்றை விரும்பவதாக தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறைய 500 பேர் கலந்துகொண்ட கருத்துகணிப்பில் அரைவாசி மக்கள் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.



