இலங்கையில் தொற்றா நோயினால் 80 சதவீதமானோர் உயிரிழப்பு!
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாகவும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கொண்டவர்களின் முதல் ஆரம்பத்தை அவதானிக்கும்போது அவர்கள் எடை குறைந்தவர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் வசதி குறைந்தவர்களாக உள்ளனர். இலங்கை மத்திய பொருளாதாரம் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் தான் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் குறிப்பாக மேல் மாகாணத்தில் ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் காணப்படுகிறது.
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவற்றுக்கு தொற்றா நோய்கள் மற்றும் அதனையொட்டிய நோய்களே பிரதான காரணியாக உள்ளன. இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு பிரதான மூலக் காரணி சீனியாகும்.
குறிப்பாக மது பாவனை பழக்கமுடையவர்களே இதில் பெரும்பாலானவர்களாக உள்ளனர்.
அதிகளவு சீனி எடுத்துக்கொள்வது இதயத்தில் கொழுப்பு படிவதற்கு காரணமாக அமைகிறது. என மருத்துவ சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
