நண்பனுக்காக கருப்பு படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக முதலமைச்சர்

#TamilCinema #Lanka4 #release #Vijay #ChiefMinister #Movie
Prasu
1 month ago
நண்பனுக்காக கருப்பு படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக முதலமைச்சர்

நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். 

இதில் கதாநாயகியாக திரிஷா, சகா நடிகர்களாக சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், கலை மற்றும் சினிமா துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளைத் திரையிட அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. 

வரும் 14ம் திகதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு, வெளியீட்டு நாளன்று ஒரு சிறப்பு காட்சி வீதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தமிழகத்தில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் நிலையில், தற்போது ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட வழங்கப்படும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4