13 வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் லண்டன் மற்றும் சுவிஸில்!
#Switzerland
#swissnews
Mayoorikka
1 year ago
13 வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது.
இந்த மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் லண்டனில் கடந்த 20 ஆம் திகதியும் சுவிஸர்லாந்தில் 27 திகதியும் இடம்பெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் லண்டனில் இருந்தும் சுவிஸர்லாந்தில் இருந்தும் ஏனைய பல நாடுகளில் இருந்தும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த மாநாட்டினை சுவிட்சர்லாந்து ஜனாதிபதி ஆரம்பித்து வைக்க உள்ளார். மேலும் 40க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.