ஸ்பெயின் பிரதமருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

#PrimeMinister #people #Resign #Rally #supporters #Spain
Prasu
1 year ago
ஸ்பெயின் பிரதமருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

ஸ்பெயின்பிரதமர் பெட்ரோ சான்செஸ் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடி பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

சோசலிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கட்சி உறுப்பினர்களும் மாட்ரிட்டில் உள்ள கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு வெளியே அணிவகுத்து, இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

வலதுசாரி நலன்களுடன் இணைந்த குழுவால் சான்செஸின் மனைவிக்கு எதிராக செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஒரு பூர்வாங்க விசாரணையைத் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு சான்செஸின் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு வந்தது.

 ஸ்பெயின் தலைவர் குற்றச்சாட்டுகள் “மோசமானவை” என்றும், அவரது குடும்பத்தை குறிவைத்து அவரை இழிவுபடுத்துவதற்கான திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என்று அவர் விவரித்தார். சான்செஸ் பதவி விலக இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!