பாகிஸ்தான் துணைப் பிரதமராக இஷாக் தர் நியமனம்
#PrimeMinister
#government
#Pakistan
Prasu
1 year ago

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சவுதி சென்றுள்ளார்.
உலக பொருளாதார மாநாட்டின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் எனர்ஜி தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. ஷாபாஸ் ஷெரீப் உடன் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் சென்றுள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொள்கிறார்.
அங்கு ஷாபாஸ் ஷெரீப் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் தாரை நியமனம் செய்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்



