IPL - 212 ஓட்டங்கள் குவித்த சென்னை அணி

#IPL #T20 #Chennai #hyderabad #2024
Prasu
5 months ago
IPL - 212 ஓட்டங்கள் குவித்த சென்னை அணி

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல்கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ரகானே , ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ரகானே 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து டேரில் மிட்செல் களமிறங்கினார். ருதுராஜ் கெய்க்வாட் , மிட்செல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். 

பின்னர் மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து ஷிவம் துபே களமிறங்கினார்.

அரைசதம் கடந்த பிறகு ருதுராஜ் கெயிக்வாட் , சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.மறுபுறம் துபே சிக்சர்களை பறக்க விட்டார்.சிறப்பாக ஆடிய ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 213 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!