ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: ட்ரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு தள்ளிப்போக வாய்ப்பு?

#Meeting #world_news #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #L4 #DonaldTrump
Abi
1 hour ago
ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: ட்ரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு தள்ளிப்போக வாய்ப்பு?

சீனாவிற்கு இம்மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த தனது நீண்டகால எதிர்பார்ப்புக்குரிய விஜயத்தைத் தாம் தள்ளிவைக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமிஞை காட்டியுள்ளார்.

'பைனான்சியல் டைம்ஸ்' இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். ஈரான் போர் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு சீனா உதவ வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

"சீனா தனது 90 சதவீத எரிபொருளை இந்தப் பிராந்தியத்திலிருந்தே பெறுகிறது. எனவே, அதனைத் திறப்பதற்கு பெய்ஜிங் முன்வர வேண்டும். 

அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதைச் சந்திப்பிற்கு முன்னரே நாம் அறிய விரும்புகிறோம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ள அதேவேளை, இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க விவசாயப் பொருட்கள் மற்றும் எரிசக்தி கொள்வனவை சீனா அதிகரித்தல், அமெரிக்கத் தொழில்நுட்பங்களைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்த இணக்கப்பாடுகள், அமெரிக்காவின் உற்பத்தித் துறைக்குத் தேவையான அரிய வகை தாதுக்களைச் சீனாவிலிருந்து பெறுவதை உறுதி செய்தல் என்பனவே இந்த சந்திப்பின் நோக்கமாகும். 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். 

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளுக்கு இடையிலான உறவை ஸ்திரப்படுத்தவும், கருத்து வேறுபாடுகள் முற்றிப்போவதைத் தவிர்க்கவும் இந்தச் சந்திப்பு மிக அவசியமாகக் கருதப்படுகிறது.

ஒருவேளை இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டால், அது இரு நாடுகளின் பொருளாதாரத்திலும், அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ட்ரம்ப்பின் இந்த மறைமுக மிரட்டலானது, வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையிலான உறவு எந்தளவிற்குப் பலவீனமாகவும், ஊசலாட்டத்துடனும் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!