ஈரானின் பிரபல ராப் இசை பாடகர் சலேஹிக்கு மரண தண்டனை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டின் பிரபல ராப் பாடகர் டூமாஜ் சலேஹிக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்ட அந்நாட்டு அரசு ஊடகம், சலாஹியின் தண்டனை குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 22 வயதான மாஷா அமினி பொலிஸ் காவலில் உயிரிழந்ததை அடுத்து போராட்டங்கள் ஆரம்பமாகின.
இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சலேஹி அறிக்கைகளை வெளியிட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



