எதிர் தாக்குதலுக்கு ஏவுகணைகள் இல்லை - உக்ரைன் ஜனாதிபதி

#Attack #Russia #Missile #Ukraine #War #Zelensky #President
Prasu
1 month ago
எதிர் தாக்குதலுக்கு ஏவுகணைகள் இல்லை - உக்ரைன் ஜனாதிபதி

ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ந்தேதி டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. 

இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம் நோக்கி வீசியது. அதில் உக்ரைன் ராணுவம் ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. 4 ஏவுகணைகள் டிரிபில்லியா மின்சார நிலையத்தை தாக்கிவிட்டது.

ஏனென்றால் எங்களிடம் ஏவுகணைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் இல்லை. மின்சார நிலையத்தை பாதுகாப்பதற்கான ஏவுகணை அனைத்தும் தீர்ந்துவிட்டன" என்றார்.

இந்த மின்சார உற்பத்தி நிலையம் கீவ் நகரின் தெற்குப்பகுதியில் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கீவ், ஜிடோமிர், செர்காசி ஆகிய நகரங்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது.

 ரஷியாவின் தாக்குதலில் சிறந்த முறையில் எதிர்கொள்ளும் இடமாக உக்ரைன் தலைநகர் விளங்குகிறது. ஆனால், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் விவகாரம் அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளதால் வான்பாதுகாப்பில் சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளது.