மசூதியில் தொழுகையின் போது தீப்பிடித்த எரிவாயு சிலிண்டர் - ஒருவர் மரணம்

#Death #Pakistan #Blast #Mosque #Gas
Prasu
1 year ago
மசூதியில்  தொழுகையின் போது தீப்பிடித்த எரிவாயு சிலிண்டர் - ஒருவர் மரணம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 5 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். 

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மசூதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள், தொழுகை நடைபெற்றபோது தங்களுக்கு தேநீர் தயாரித்தபோது சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!