பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

#PrimeMinister #Protest #people #Resign #Israel #War #Hamas #Netanyahu
Prasu
1 year ago
பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தைக் கடந்துள்ளது. 

இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

டெல் அவிவ் நகரில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பிரதமர் நேதன்யாகு பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர்.

 பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!