பிரசவ அறையில் தந்தை: இலங்கையில் ஆரம்பமாகும் புதிய திட்டம்
#SriLanka
#Hospital
#baby
Mayoorikka
1 year ago

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது மனைவிக்கு கணவன் துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தினூடாக தாய்மார்களுக்கு ஏற்ற சூழலில் குழந்தை பிறக்க வழிவகுப்பதோடு, பிரசவத்தின்போது தந்தை துணையாக இருக்க வாய்ப்பளிக்கிறது.



