இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை சடுதியாக வீழ்ச்சி

#SriLanka #prices #Dollar #Mobile
Prasu
1 year ago
இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை சடுதியாக வீழ்ச்சி

டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை 18% – 20% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்த வியடங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 

தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போது டொலர் 300 ரூபா வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஐபோன் 15 pro max 515000 முதல் 530000 ரூபா வரை காணப்பட்ட விலை தற்போது 375000 ரூபா வரை குறைவடைந்துள்ளது.

அதேபோல், குறைந்த விலையுடைய கைப்பேசிகளின் விலையும் 18 முதல் 20 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளதை காணக்கூடியதாய் உள்ளது.

 10,000 ரூபா வரை அதிகரித்திருந்த கைப்பேசியை தற்போது 7000 ரூபாக்கு பெற்றுக் கொள்ள முடியும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!