இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு கிடைத்த அங்கீகாரம்!
#SriLanka
#JeevanThondaman
Mayoorikka
1 year ago

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அமைச்சர் ஒருவர் உலக இளம் உலக தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுகின்றமை இதுவே முதன்முறையாகும். பொதுசேவையில் அவரது அர்ப்பணிப்பும், புதிய அணுகுமுறையிலான அவரது தலைமைத்துவமும் தேசிய அளவில் சிறந்த – நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இளம் உலக தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.



