இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Import
Mayoorikka
1 year ago
இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி இந்த செயல்முறை நடந்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ''நாட்டில் பணப்பரிவர்த்தனை பிரச்சினையால் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். 

ஆனால் சுற்றுலாத்துறையில் 6 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்களை பயன்படுத்துவதில்லை. இப்போது எங்களின் வாகனங்கள் பழையதாகிவிட்டன. அதனால் தான் சுற்றுலாத் துறைக்காக 250 பேருந்துகள் மற்றும் 750 வேன்களை கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது'' என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!