சட்டவிரோத வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் கைது

#SriLanka #Arrest #Police #tablets #illegal
Prasu
1 year ago
சட்டவிரோத வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 5033 வலி நிவாரணி மாத்திரைகளுடன் கல்முனை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை கல்முனை பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் மூலம், செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 63 வயதுடைய, கல்முனை - மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

குறித்த சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை, மருந்து மற்றும் உணவு பரிசோதனை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!