இரு வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

#SriLanka #Death #Accident #Road #School Student
Prasu
1 year ago
இரு வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது சிறுவன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளான். மாத்தறை தங்காலை பிரதான வீதியின் தொடம்பஹல உடதெனிய பகுதியில் டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினால் முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி, பின் இருக்கையில் பயணித்த பெண் மற்றும் அவரது மகன் ஆகியோர் படுகாயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். உயிரிழந்தவர் தன்பதிகம பிபில பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவன்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையை விட்டு வெளியேறி தற்போது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 இதேவேளை ஆனமடுவ - நவகத்தேகம வீதியில் வாகன விபத்தும் இடம்பெற்றுள்ளது. உஸ்வெவ பிரதேசத்தில் பாதசாரி கடவையில் பயணித்த 13 வயது சிறுமி லொறியில் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!