தென்னிலங்கை அரசியலில் உருவான புதிய கூட்டணி!

#SriLanka #Sajith Premadasa
Mayoorikka
1 year ago
தென்னிலங்கை அரசியலில் உருவான புதிய கூட்டணி!

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமானது. இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

 இது தொடர்பான ஒப்பந்தத்தில் பேராசிரியர் ஜி.எல். பீர்ஸ் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இன்று (05) காலை கைச்சாத்திட்டுள்ளனர். 

 இதன்படி, சுதந்திர மக்கள் சபையின் 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர். 

 பேராசிரியர் ஜி.எல்.பீர்ஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இவ்வாறு சமகி ஜன சந்தனவில் இணைந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!