ஜே வி பி யாழ் வருகையும் தமிழ் கட்சிகளின் உடைவுகளும்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்திருந்தமை அனைவராலும் பேசபப்டுகின்றது. ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் யாழ்ப்பாணதிற்ரு வருகை தந்திருந்தார்.
இதேவேளை நேற்று யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மாநாடும் இடம்பெற்றிருந்தது. இந்த மாநாட்டிலும் அனுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.
இங்கே உரையாற்றிய அனுரகுமார தெரிவித்த முக்கிய கருத்தாக ஆட்சியாளர்களால் தான் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள பிளவுகள் ஏற்பட்டது எனவும் அரசியல் நலனுக்கான இனவாத அரசியலே அவர்களது முதன்மையான நோக்கமாக இருந்தது எனவும் தெரிவித்திருந்தார். இதன் மூலம் இவர் யாழ்மக்களுக்கு தாங்கள் அதாவது ஜேவிபி கட்சி இனவாதம் பேசவில்லை என்பதை தெரிவித்திருக்கின்றார். ஆனால் தமிழர்கள் மத்தியில் ஜேவிபி கடந்தகாலங்களில் எவ்வாறு இனக்கலவரங்களை தூண்டி விட்டது என்பதை மறந்திருக்க மாட்டார்கள்.
அதேவேளை நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் பகிரங்கமாகவும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதேவேளை இது இவ்வாறிருக்க ஜேவிபியின் வங்கி மற்றும் நிதித்துறை மாநாட்டில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார். ரணிலின் பக்கம் நின்ற சுமந்திரன் தற்பொழுது ஜேவிபியின் பக்கம் சாய்ந்துள்ளார். இதன் மூலம் சுமந்திரன் தமிழ் மக்களை குழப்பி வாக்குகளை உடைக்க நினைக்கின்றாரோ என்னவோ.
இதேநேரம் தமிழ் மக்களின் பொது வேட்ப்பாளர் யார் என்பதை உணரத்தலைப்படாத நிலையில், இன்றும் தமது அரசியல் செயற்பாட்டைத் தமிழ்த் தலைமைகள் முன்னெடுக்கும் நிலையில், சிங்கள கட்சிகள், தமிழ் மக்களைப் பிரித்தாளுவதில் வெற்றி கண்டுள்ளது என்றே எண்ணத்தோன்றுகின்றது.
யாழ் மாவட்டத்தில் எக்கட்சி வெற்றி கொண்டாலும், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்யலாம் என்பதால் இவ்வாறான கட்சி உடைவுகள், தனிநபர் அரசியல் சுயலாபமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதை அனுர தெளிவாக தெரிந்து காய்நகர்த்தி வருகின்றார்.



