கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு குடிநீர் விநியோகம்!

#SriLanka #Kilinochchi #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு குடிநீர் விநியோகம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் புனித பற்றிமா ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கான குடிநீர் ஏற்பாடு இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

குறித்த பாடசாலையில் சுமார் 400 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் இவர்களுக்கான சுத்தமான குடிநீர் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர்.  

இந்த விடயம் தொடர்பாக இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக அவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 02.04.2024 கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கட்டளை தளபதி பிரிகேடியர் ஜனரல் விக்ரமசிங்க அவர்களின் கரங்களால் சுத்திகரிக்கப்ட்ட குடிநீர் விநியோகத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  

அதேவேளை இப்பகுதியில் வாழும் மக்களுக்கான குடிநீர் வினியோகமும் ஆரம்பிக்கப்பட்டது.   

இன் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரன், கிளிநொச்சி முல்லைத்தீவு இராணுவ உயர் இராணுவ அதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர், கிராமசேவையாள, பள்ளி முதல்வர் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!