பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அனுரவிற்கு அழைப்பு விடுத்த சஜித்!
#SriLanka
#Sajith Premadasa
#AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
அனுரகுமார திஸாநாயக்கவுடன் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான பகிரங்க விவாதத்துக்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தேசிய மக்கள் சக்தி இன்று (02) அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விவாதம் நடத்துவது நல்லதொரு நகர்வாகும் என்றும் அதன் மூலம் அவர்களின் கொள்கைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் விவாதத்துக்கு அநுரகுமார திஸாநாயக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.