குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 9 பேர் கைது

#SriLanka #Arrest #Police #Crime #Criminal
Prasu
1 year ago
குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 9 பேர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் மற்றும் மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். 

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட யுக்திய நடவடிக்கையின் கீழ் இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

32 வயது முதல் 50 வயதுக்கிடைப்பட்ட 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கோனபீனுவல, ஹீங்குரக்கொட, ஹிக்கடுவை, வாத்துவை, நீர்க்கொழும்பு, கனேமுல்லை, வாழைத்தோட்டம், மற்றும் புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இதற்கு மேலதிகமாக, குற்றச் செயல்களுக்கு ஆதரவளித்த மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 237 என தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!