இலங்கையில் அதிக செலவு கொண்ட மாவட்டம்: புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
#SriLanka
#Colombo
Mayoorikka
1 year ago

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபா தேவைப்படுகின்றது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வறுமைக்கோடு தொடர்பான புதிய அட்டவணையை வௌியிட்டுள்ளது.
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் அதிக செலவினைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு, குறைந்த செலவினைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை காணப்படுகின்றது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவாக 18,350 ரூபா காணப்படுகின்றது.
மொனராகலையில் ஒருவர் வறுமை நிலையை எட்டாமல், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு 16,268 ரூபா தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



