முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது!
#SriLanka
#Colombo
#Arrest
Soruban
1 year ago
வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ.அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நேற்றையதினம்(26) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அரசியல் கைதியான செ.அரவிந்தன் கடந்த வாரம் முகப் புத்தக பதிவு தொடர்பில் கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு செல்லாத நிலையில் நேற்றைய தினம்(26) மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்றைய தினம் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு சென்ற சமயமே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கொழும்பு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.