இலங்கையின் அமைதியற்ற சூழல் சுற்றுலாத்துறையை பாதிக்கும் - தேஷ்பந்து தென்னகோன்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கையின் அமைதியற்ற சூழல் சுற்றுலாத்துறையை பாதிக்கும் - தேஷ்பந்து தென்னகோன்!

நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழல் சுற்றுலா வர்த்தகத்தை நேரடியாக பாதிக்கும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.  

தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பாதாள உலக செயற்பாடுகள் போன்ற பயங்கரமான சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். 

பெந்தர, அஹுங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் அமைதியான சூழலில் வாழ விரும்புகின்றனர். இங்கு துப்பாக்கிச் சூடு சத்தத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த மக்கள் இனி இங்கு வரமாட்டார்கள். 

எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் மிகவும் அவசியம். அத்துடன், சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!