டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனை சட்டம் விரைவில்!

#SriLanka #Ranil wickremesinghe #Digital
Mayoorikka
1 year ago
டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனை சட்டம் விரைவில்!

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை உருவாக்குவதற்கான சட்டங்கள் இந்த வருட நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் பிரதான உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இந்திய உயர்ஸ்தானிகராலயமும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

 டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகம் தொடர்பில் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவும் அனுபவமும் கொண்ட பல இந்திய மற்றும் இலங்கை நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதார மாற்றத் திட்டத்தை இலகுபடுத்தும் வகையில் புதிய நிறுவன கட்டமைப்பொன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

தகவல் தொழில்நுட்ப சபை போன்ற தற்போதுள்ள கட்டமைப்புகளில் இருந்து விலகி, டிஜிட்டல் மாற்றத்திற்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக 2024 வரவு - செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு பில்லியன் ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 

 விவசாயத்தை நவீனமயமாக்குவது, வறுமையை நிவர்த்தி செய்வது மற்றும் கல்வி முறையை சீர்திருத்துவது போன்றவற்றில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வறுமையைக் குறைக்கும் தேசிய இலக்குடன் அரசாங்கம் செயற்படுகிறது. 2035 ஆம் ஆண்டளவில் இலங்கை மக்களில் வறுமை 10 வீதத்தை தாண்டாது என்பதை உறுதிப்படுத்துவது எமது நோக்கமாகும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!