குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 12 பேர் கைது

#SriLanka #Arrest #Police #people #Crime #Case
Prasu
1 year ago
குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 12 பேர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையில்​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று (25ஆம் திகதி) வரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேற்படி 12 பேரைக் கைது செய்தமைக்கு மேலதிகமாக, விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மேலும் 06 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

 கடந்த 19ஆம் திகதி முதல் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் கும்பல்களைச் சேர்ந்தவர்களை கைது செய்ய 20 விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு விசேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!