மைத்திரியின் வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

#SriLanka #Easter Sunday Attack #Maithripala Sirisena
Mayoorikka
1 year ago
மைத்திரியின் வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்கு தெரியும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தமக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கண்டியில் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்ததை அடுத்து மைத்திரிபால சிறிசேன நேற்று சிஐடியில் ஆஜரானார். அவரிடமிருந்து எடுக்கப்பட்ட வாக்குமூலமே சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!