பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படை விமான நிலையம் மீது தாக்குதல்!
#SriLanka
#Pakistan
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படை விமான நிலையமான துர்பத்தில் உள்ள PNS சித்திக் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) மஜீத் பிரிகேட், துர்பத்தில் உள்ள கடற்படை விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தி பலுசிஸ்தான் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பலுசிஸ்தானில் சீனாவின் முதலீடுகளை மஜீத் படைப்பிரிவு விமர்சித்துள்ளது, சீனாவும் பாகிஸ்தானும் பிராந்தியத்தின் வளங்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டுகிறது.
இதன் விளைவாகவே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



