கல்முனையில் பிரதேச சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கல்முனை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலும் இன்று (26.03) பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலையொன்றில் மரதன் ஓட்டப் போட்டியின் போது 17 வயதுடைய மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்ததையடுத்து வைத்தியசாலையை தாக்கி சேதம் விளைவித்ததோடு வைத்தியசாலை வைத்தியர்களை அச்சுறுத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படாததால், இன்று காலை 8:00 மணி முதல் தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேவன்ச தெரிவித்துள்ளார்.



