மட்டக்களப்பில் மோட்டார் பந்தையத்தால் நேர்ந்த விபத்து : இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
#SriLanka
#Batticaloa
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் இன்று (25.03) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஓட்டமாவடி - மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கில்களில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதில், இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



