தனியார் கல்வி நிறுவனமொன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையில் மோதல்!
#SriLanka
#Student
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இப்பாகமுவ - பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் குழுவிற்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பு தனியார் கல்வி நிறுவனமொன்றில் நேற்று (24.03) இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
03 ஆண் மாணவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும், 04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.