ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கனடாவில் அதிரடி தகவல் தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க!

#SriLanka #Canada #Easter Sunday Attack #AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கனடாவில் அதிரடி தகவல்  தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் அதிகாரி எம்முடன் உள்ளார் எனவே தீர்வு வரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கனடாவில் தெரிவித்துள்ளார். 

 கனடாவுக்கு விஜயம் கேற்கொண்டுள்ள அனுரகுமார, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், நேற்று முன்தினம்(23) இடம்பெற்ற சந்திப்பில், ஈஸ்டர் தாக்குதல் குறித்து 2025 ஆம் ஆண்டு உண்மையை கண்டறிவீர்கள் என்று கனடாவில் உள்ள கத்தோலிக்க சமுகம் எதிர்பார்க்கிறது.

 இதற்கான தீர்வு என்ன என அங்கிருந்த ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதல் குறித்து தெரியும் என்று தற்போது கூறியுள்ளார். தாக்குதல் நடைபெற்ற போது அவர்தான் ஜனாதிபதி அவரிற்குதான் அது குறித்து பொறுப்பு உள்ளது.

 மற்றும் இத் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் அதிகாரி நம்மோடு உள்ளார் எனவே கண்டிப்பாக தீர்வு வரும் எனவும் அனுர பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!