குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லவுள்ள மைத்திரி!
#SriLanka
#Easter Sunday Attack
#Maithripala Sirisena
Mayoorikka
1 year ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேற்று முன்தினம் 22ஆம் திகதி வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவரை தமக்கு தெரியுமென மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவாரென பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்று திங்கட்கிழமை தான் குற்றப்புலனாய்வுப் பிரிவு முன் தோன்றி சாட்சியமளிக்க உள்ளதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.