அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் சந்திரிகா விடுத்துள்ள கோரிக்கை!
#SriLanka
#Election
#Chandrika Kumaratunga
#government
Soruban
1 year ago
ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அது பற்றிப் பேசுவதற்காக மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளார்.
மேலும், மே மாதத்துக்குப் பின்பே தேர்தல் விடயங்கள் சூடு பிடிக்கும் என்றும், அப்போது கூட்டணி அமைப்பது தொடர்பில் செயலில் இறங்குவதே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.