நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நைஜீரியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 300 பாடசாலை மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுனா மாநில ஆளுநரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. குழந்தைகள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளைக் காப்பாற்ற தொடர்ந்து முயற்சித்து வரும் அதிபர் போலா டினுபுவுக்கு ஆளுநர் நன்றி கூறியுள்ளார்.
மார்ச் மாத தொடக்கத்தில், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள பள்ளி ஒன்றில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதம் ஏந்திய குழுவினால் இந்தக் குழு மாணவர்கள் கடத்தப்பட்டனர்.
நைஜீரியாவில் கப்பம் பெறும் நோக்கில் பாடசாலை மாணவர்களை கடத்திச் செல்லும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.



