தென்னிலங்கையில் உலக சாதனை படைத்த தமிழன்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #WorldRecord
Dhushanthini K
1 year ago
தென்னிலங்கையில் உலக சாதனை படைத்த தமிழன்!

தலைநகர் கொழும்பில் தமிழ் ஒருவரின் சாதனை குறித்து சிங்களவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

 யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் ஏஷ் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே இழுத்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

 கொழும்பு காலி முகத்திடலில் 1000 மீற்றர் தூரத்திற்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக இருந்தது. 

 அதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய ஏஷ் பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தாடியாலும், 500 மீற்றர் தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் அந்த உலக சாதனையை நிகழ்த்தினார். 

 இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வம் அவர்களின் சாதனையை அங்கீகரித்தனர். 

இதன்போது பதக்கத்தையும் , விருதையும் , பட்டயத்தையும் வழங்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!