Sinaloa மாநிலத்தில் கிரிமினல் குழுக்களால் கடத்தப்பட்ட பணயக்கைதிகள் மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

Sinaloa மாநிலத்தில் கிரிமினல் குழுக்களால் கடத்தப்பட்ட பணயக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி 18 குழந்தைகள் உள்பட 42 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட மேலும் 24 பேரைக் கண்டுபிடிக்க காவல்துறை மற்றும் இராணுவப் படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக மத்திய அரசு சிறப்புப் படைகளை சினாலோவாவுக்கு அனுப்பியது. கூடுதலாக 300 வீரர்கள் மற்றும் ஒரு தேசிய காவலர் பட்டாலியனும் இப்பகுதியில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



