தேர்தல் சட்டங்கள் குறித்த பரிந்துரைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை ஆய்வு செய்து, காலத்தின் தேவைக்கேற்ப தேர்தல் விதிகளில் திருத்தம் செய்ய பரிந்துரைகளை வழங்க பிரியசாத் டெப் தலைமையில் விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும் நாள் வரையிலான நேரத்தை குறைத்தல், வாக்களிப்பில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குதல், இலங்கையர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தல் உள்ளிட்டவற்றை குறித்த குழு ஒழுங்குப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பரிந்துரைகளை ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் எனவும் மேலும் 02 மாதங்களுக்கு காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, இது தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஜூன் 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



