ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : பொலிஸ்மா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
#SriLanka
#Maithripala Sirisena
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அதனை வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



