கிளிநொச்சி வளாகம் பல்கலைக்கழகமாக பரிணமிக்கும் - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை

#SriLanka #Douglas Devananda #Kilinochchi #University
Mayoorikka
1 year ago
கிளிநொச்சி வளாகம் பல்கலைக்கழகமாக பரிணமிக்கும் - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் எதிர்காலத்தில் கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றம்பெறும் வாய்ப்புகள் வரலாம் என நம்பிக்கை வெளிப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி அறிவியல்நகர் பெறியியல் பீடம் உருவாகியதன் பழைய நினைவுகளையும் நினைவு கூர்ந்துள்ளார்.

 கிளிநொச்சி அறிவியல் நகர் பொறியியல் துறையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் .. இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

யாழ் பல்கலைகழகத்திற்கு ஒரு பொறியியல் துறை தேவையென பேராசிரியர் துரைராஜாவின் முப்பத்தி மூன்று வருட கனவு நிறைவு பெற்று இன்று பத்து வருடங்கள் கடந்துவிட்டன். 

அதுமட்டுமல்லாது குறித்த வளாகம் பல ஆயிரம் மாணவர்களை பிரசவித்துவிட்டது மேலும் இன்று யாழ் பல்கலையின் வளாகமாக உள்ள கிளிநொச்சி பொறியியல் பீடம் அதனுடன் இணைந்த தொழில் நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடம் எதிர்காலத்தில் கிளிநொச்சியில் பல்கலைக்கழகம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்புடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!