தையிட்டியில் சிங்களக் குடியேற்றம்: அம்பலப்படுத்திய சுகாஷ்! எழுச்சிக்கு அழைப்பு

#SriLanka #Jaffna
Mayoorikka
1 year ago
தையிட்டியில் சிங்களக் குடியேற்றம்: அம்பலப்படுத்திய சுகாஷ்! எழுச்சிக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் சிங்களக் குடியேற்றத்திற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அறிய முடிகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

 தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகாமையிலேயே இந்த சிங்கள குடியேற்றங்கள் குடியேற்றப்படவுள்ளதாக அறிய முடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

images/content-image/2024/03/1711205252.jpg

 இந்த செயற்பாட்டினை இப்பொழுதே தடுத்து நிறுத்தாவிட்டால் தையிட்டி பறிபோகும் யாழ்ப்பாணம், தமிழர் தாயகம் என அனைத்தும் பறிபோகும் நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது வெடுக்குநாறி மலைக்காக மக்கள் எவ்வாறு திரண்டு பாரிய எழுச்சியை ஏற்படுத்தி கைது செய்யப்பட்ட அனைவரையும் விளக்கமறியலில் இருந்து வெளியில் கொண்டுவந்தார்களோ அதேபோல் தையிட்டியில் அமையப்பெற்றுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 இதேவேளை தையிட்டி விகாரையை அகற்றக் கோரி இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் நாளை வரை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!