மொஸ்கோ தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்!
#SriLanka
#Attack
#Russia
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கோழைத்தனமான வன்முறைச் செயல்கள் வெறுக்கத்தக்கவை என்றும் நாகரீக சமூகத்தில் அதற்கு இடமில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பொதுமக்களுக்கும், ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கமும் மக்களும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.