அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகத்தை நோயாளிக்கு பொருத்தி சாதனை
#America
#doctor
#Human
#kidney
#Surgery
#Pig
#Record
#Transfer
Prasu
1 year ago
அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் உலகின் முதல் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பன்றி சிறுநீரகத்தை வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளார்.
மசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியான ரிச்சர்ட் ஸ்லேமனுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, பன்றியின் சிறுநீரகங்கள் மற்றும் மூளை ஆகியன இறந்த நன்கொடையாளர்களுக்கு தற்காலிகமாக பொருத்தப்பட்டன.
துரதிர்ஷ்டவசமாக, பன்றிகளிடமிருந்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த சில மாதங்களுக்குள் இரண்டு ஆண்கள் இறந்தனர்.
இந்நிலையிலேயே மேற்படி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.