உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களின் உடல்நிலை மேலும் மோசம்!

#SriLanka #strike #Fisherman
Mayoorikka
1 year ago
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களின் உடல்நிலை மேலும் மோசம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் 4 பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து வருகின்றது என்று அவர்களைப் பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 யாழ். குடாப் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை நான்கு மீனவர்கள் யாழ். இந்தியத் துணை தூதரகத்துக்குச் செல்லும் வாயிலில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

 நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களின் உடல் சோர்வடைந்த நிலையில் குறித்த இடத்துக்கு வைத்தியர் வரவழைக்கப்பட்டு உடல் நிலை தொடர்பில் பரிசோதிக்கப்பட்டது.

 மேற்படி நால்வரையும் பரிசோதித்த வைத்தியர், மீனவர்களின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதால் சோர்வு ஏற்படுகின்ற நிலையில் நீரை அதிகளவு அருந்துமாறு கோரிக்கை விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!