வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி!
#SriLanka
Mayoorikka
1 year ago

வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவ புளியங்குளம், ரயில் நிலைய வீதியில் இன்று (21) மதியம் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
வவுனியா நகரப்பகுதியில் ரயில் நிலைய வீதி ஊடாக சென்ற முச்சக்கரவண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ள துடன், குறித்த விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



